கேட்ஸ் அறக்கட்டளையின் சுயாதீன ஆலோசகர் - ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்!

#SriLanka
Thamilini
1 year ago
கேட்ஸ் அறக்கட்டளையின் சுயாதீன ஆலோசகர்  - ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்!

கேட்ஸ் அறக்கட்டளையின் சுயாதீன ஆலோசகர்  சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இதன்போது இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்துதல், பள்ளி மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துதல், பொது மற்றும் தனியார் துறைகளில் மனித வளங்களை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் போன்றன தொடர்பிலான திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

 புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய  சந்தத சமரநாயக்க, அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு நிதி, தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கு கேட்ஸ் அறக்கட்டளை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

 இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் திரு.ரொஷான் கமகே அவர்களும் கலந்துகொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4