விமான தபால் சேவை மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் : ஒருவர் கைது!

#SriLanka #Arrest
Thamilini
1 year ago
விமான தபால் சேவை மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் : ஒருவர் கைது!

94 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான “குஷ் மற்றும்  கஞ்சா போதை பொருள்  கட்டுநாயக்க விமான சரக்கு கிராமத்திற்கு விமான தபால் சேவை மூலம்   அனுப்ப்பிவைக்கப்பட்ட  நிலையில் அதனை எடுத்துச் செல்ல வந்த நபர் ஒருவர் நேற்று (02) பிற்பகல் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இந்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  

கனடாவில் இருந்து துபாய் ஊடாக பிலியந்தலை பிரதேசத்திலுள்ள முகவரிக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.

 ஜா-அல, கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய ஒருவர் குறித்த பார்சலை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்ட பார்சலை சுங்க அதிகாரிகள் திறந்து சோதனையிட்ட போது 01 கிலோ 883 கிராம் எடை கொண்ட “குஷ்” போதைப்பொருள் கையிருப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்ப்பட்டு  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவரை சிறையில் அடைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4