முட்டை விலையில் வித்தியாசம்! ஏன் இந்த நிலை?
நாடாளாவிய ரீதியில் முடடையின் விலையை அண்மைய காலங்களில் விலை குறைப்பு ஏற்படுத்தினாலும் சில கடைகளின் இன்னும் முட்டையின் விலை குறைக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் உள்ள கடைகளில் சில பெரிய கடைகளிலும் சில சிறிய உள்ளூர் கடைகளிலும் முட்டையின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
முட்டையின் விலை 28 ரூபாவிற்கு விலைக்குறைப்பு ஏற்படுத்தினாலும் அதற்கு அதிகமாகவே விற்கப்படுகின்றது.
சில கடைகளில் முட்டையின் விலை 75 ரூபாவிற்கும் விற்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்தள்ளர்னர்.
இதேவேளை முட்டையின் விலையை குறைத்தாலும் அதற்கான மூலப் பொருட்களான மாஸ் போன்றவற்றை அரசாங்கம் விலைக் குறைப்பு செய்யவில்லை எனவும் அதற்கான செலவு அதிகம் எனவும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வர்த்தகர்கள் முட்டை இறக்குமதிக்கான செலவு அதிகமென்பதால் முட்டியின் விலையை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளனர்.