பிரித்தானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
பிரித்தானியாவுக்கு சொந்தமான “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, செங்கடல் பகுதியாக செல்லும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போது செங்கடல் வழியாக சென்ற பிரித்தானியாவின் “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும் காமிகேஸ் ட்ரோன் கப்பல் மூலம்(kamikaze) பிரித்தானியாவின் “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலை தாக்கும் வீடியோ காட்சிகளையும் ஹவுதி அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய எண்ணெய் டேங்கர் கப்பலில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் வான்வழி ஆளில்லா ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய போதிலும் இந்த தாக்குதலை ஹவுதி அமைப்பினர் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.