அபிவிருத்தி தொடர்பில் ஐ. நா பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதியின் செயலாளர்

#SriLanka #Sri Lanka President #UN
Mayoorikka
1 year ago
அபிவிருத்தி தொடர்பில் ஐ. நா  பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதியின் செயலாளர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

 ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

 இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆர்வம் தொடர்பிலும் வதிவிடப் பிரதிநிதி இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4