கனடாவில் வௌவால் மூலம் பரவிய வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுமி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வௌவால் ஒன்றின் மூலம் பரவிய வைரஸ் தொற்றினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்றாரியோ சுகாதார அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளனர். வடக்கு ஒன்றாரியோ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. டாக்டர் மெல்காம் லாக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வீட்டின் அறையில் வௌவால் ஒன்று இருந்ததாகவும் அந்த வௌவால் சிறுமியை கடிக்கவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு எனினும் துரதிஷ்டவசமாக வௌவாலின் மூலம் பரவிய வைரஸ் ஒன்றின் தாக்கம் காரணமாக அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
வௌவால்கள் மத்தியில் இந்த ராபீஸ் நோய் தொற்று பரவி வருவதாகவும் இது மனிதர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1924 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் கனடாவில் ராபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் அரிதாகவே இவ்வாறு நோய்த்தொற்று பரவும் என தெரிவிக்கப்படுகிறது.
காட்டு விலங்குகளை தொடக்கூடாது எனவும் நாய்கள் பூனைகள் என்பனவற்றுக்கு நாய்கள் பூனைகள் போன்ற வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிய நேரத்தில் ராபிஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்பது உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.