நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

இன்று (06) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பொழியக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.

 வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4