புலமை பரிசில் பரீட்சை வினாக்கள் கசிவு விவகாரம் : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

#SriLanka #Police #exam
Thamilini
1 year ago
புலமை பரிசில் பரீட்சை வினாக்கள் கசிவு விவகாரம் : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் 03 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, விடைத்தாள் பரீட்சை கூட தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

 அத்துடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் வெளியானமை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4