பொதுத் தேர்தல் : வவுனியாவில் ஒன்றுக்கூடிய தமிழரசுக் கட்சினர்!

#SriLanka #Election
Thamilini
1 year ago
பொதுத் தேர்தல் : வவுனியாவில் ஒன்றுக்கூடிய தமிழரசுக் கட்சினர்!

 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று (06.10) கூடியது.

 நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.

 இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.

 இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுதல் மற்றும் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ககப்படுகின்றது.

 குறித்த கலந்துரையாடலில் நியமனக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4