முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டதா?

#SriLanka #Ranil wickremesinghe #sri lanka tamil news
Thamilini
1 year ago
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். 

 முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள வதந்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4