சுமந்திரனுடனான ஊடக சந்திப்பை புறக்கணித்த சிறிதரன்!
வவுனியாவில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் வெளியேறிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் பின் நேற்று மாலை ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அமர்ந்து கொண்டு குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களையும் அழைத்தார். ஆனால் அவர் வரவில்லை.
இதன்போது, பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் அவர்களும் அழைத்து இருந்தார். அவர் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததையடுத்து, கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் ரஞ்சினி ஆகியோர் சிறிதரன் அவர்களை கையால் பிடித்து இழுத்து அமருமாறு கோரிய போதும் அவர் அதை ஏற்காது அஙகிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து, எம்.ஏ.சுமந்திரன் சரி விடுங்கோ எனக் கூறிவிட்டு பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் அவர்களுடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சி.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.