நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #Warning #Land_Slide
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

 இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வல்லவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன், காலி மாவட்டத்தின் நயாகம, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு “மஞ்சள் நிறம்” குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4