இலங்கை உட்பட புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தினத்தினை குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சி
இந்த வருடம் 2024 இடம்பெறும் மாவீர் தினத்தினை புலம்பெயர் தேசங்களிலும் இலங்கையிலும் குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை புலிகளின் இயக்கத்தில் இருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்ற ஒரு குழு (அது எந்த குழு என்பது உங்களுக்கு தெரியும்) அந்த குழு இலங்கை உட்பட பல நாடுகளின் உளவுக்கு குழுக்களுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த உளவுக் குழுக்களுடன் இணைந்து செயற்படுகின்ற குழு உலகில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மீளெழுச்சி பெறுவதை தடுப்பதற்காகவும், அவர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்காகவும் தங்களுடைய பிழைப்பு வாதத்திற்காக செயற்பட்டு வருகின்றார்கள்.
இதன்காரணமாக அவர்களின் இந்த சதித் திட்டங்களை முறியடித்து அந்ததந்த நாட்டின் சட்ட திட்டங்களிற்கு அமைவாக தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்களை தியாகம் செய்த சகோதர்கள் சகோதரிகள் உறவினர்களுக்கும் நாம் எமது அஞ்சலிகளை எழுச்சியுடன் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் இதற்கு பொறுப்பானவர்கள் புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் விடுதலைக்காக உயிர்களை தியாகம் செய்தவர்களின் தியாகங்களை மதித்து மிகவும் உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை செலுத்துவதற்கு ஏற்பாடுகாளை செய்யவேண்டும்.