பிரான்ஸில் சிறைத்தண்டனை வழங்குவதில் புதிய மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கை!
#SriLanka
#France
Dhushanthini K
5 months ago

பிரான்ஸில் சிறைத்தண்டனை வழங்குவதில் புதிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, குறைந்த கால சிறைந்தண்டனை என்றாலும் அது முறையான சிறைத்தண்டனையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு பொதுமக்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்கள் குறித்த காலத்துக்கு முன்பாகவே விடுவித்தல் அல்லது நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்படுவதும், சிறைத்தண்டனையை பிற்போடுவதும் என பல்வேறு சூழ்நிலைகள் காணப்படுகிறது.
அவை அனைத்தும் சீரமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொது மக்களில் 67% வீதமானோர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.



