பொதுத் தேர்தல் : 33 சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுத்தாக்கல்!

#SriLanka #Election
Thamilini
1 year ago
பொதுத் தேர்தல் : 33 சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுத்தாக்கல்!

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 33 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. 

 நேற்றைய (08) இறுதிக்குள் 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளுக்கு நேற்று இறுதி வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 அத்தோடு நேற்றைய நிலவரப்படி 246 சுயேட்சைக் குழுக்கள் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

 இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4