லண்டனில் 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை

#Murder #Court Order #Prison #London
Prasu
1 year ago
லண்டனில் 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை

லண்டனில் 16 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி, கொலை செய்த வழக்கில் 17 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ம் திகதி West Ham Park பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சட்ட காரணங்களுக்காக பெயர் வெளிப்படுத்தப்படாத அந்த 17 வயது சிறுவன் ரஹான் அகமது அமீன் என்பவரின் மார்பிலேயே கத்தியால் தாக்கியுள்ளான்.

குற்றுயிராக மீட்கப்பட்ட ரஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் மரணமடைந்தார். 

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட அந்த 17 வயது நபருக்கு ஓல்டு பெய்லி நீதிமன்றம் குறைந்தது 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நீளமான சிவப்பு கத்தி, கை ரேகை மற்றும் ரஹானின் ரத்தக்கறையுடன் சம்பவம் நடந்த பகுதியிலேயே கைப்பற்றப்பட்டது.

மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் ஜூன் 12ம் திகதி இணையமூடாக கத்தியை வாங்கியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. தற்காப்புக்காக கத்தியை பயன்படுத்தியதாக முன்வைத்த வாதம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 தாக்குதல்தாரிக்கு எதிராகவே அனைத்து ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, இணையத்தில் கத்தி வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4