சொகுசு காரொன்றை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

#SriLanka
Thamilini
1 year ago
சொகுசு காரொன்றை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட சொகுசு காரொன்றை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளார். 

 போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 பதுளை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Mitsubishi Montero ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4