விமான பற்றாக்குறை காரணமாக சேவைகளை ரத்து செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்

#Flight #England #cancelled
Prasu
6 months ago
விமான பற்றாக்குறை காரணமாக சேவைகளை ரத்து செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்
விமானங்களின் பற்றாக்குறையை அடுத்து பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சேவைகளை ரத்து செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்.

முதற்கட்ட விசாரணையில், இயந்திர கோளாறு காரணமாகவே விமானங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் சில ரோல்ஸ் ராய்ஸ் ஜெட் என்ஜின் விமானங்களில் பராமரிப்பு சிக்கல்களைக் கண்டறிந்ததை அடுத்தே, சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கத்தாருக்கான விமான சேவைகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க்கின் ஜேஎஃப்கே விமான நிலையம் இடையேயான சில சேவைகள் இடைநிறுத்தப்பட்டது.

 நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலின் காரணமாக விமான நிறுவனம் ஏற்கனவே 11 வழித்தடங்களை ரத்து செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!