கனடாவில் புதைம வடிவிலான எரிபொருள் வகை விளம்பரங்களுக்கு தடை
கனடாவில் ரொறன்ரோ மாநகர சபையில் புதைம வடிவிலான எரிபொருள் வகைகளை பிரசாரம் செய்யும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
ரொறன்ரோ நகர பேரவை இது தொடர்பான யோசனையை முன்மொழிந்துள்ளது. புதைம வடிவ எரிபொருள் தொடர்பில் பிழையான விடயங்கள் உள்ளடங்கிய விளம்பரங்கள் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுற்றுச்சூழல் தொடர்பிலான போலியான விளம்பரங்களும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ நகர சபை உறுப்பினர்கள் இது தொடர்பான தீர்மானத்திற்கு தங்களது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன.
புதைம வடிவ எரிபொருள் வகை பயன்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு உந்து சக்தியாக அமையக்கூடிய விளம்பரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாறாக மக்களை பிழையாக வழிநடத்தக் கூடிய விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என கனடிய சுற்றாடல் தொடர்பான மருத்துவ பேரவையின் பேச்சாளர் டாக்டர் மிலி ரோய் தெரிவித்துள்ளார்.