ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி : சிறுவன் பலி!

#SriLanka #Accident
Thamilini
1 year ago
ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி : சிறுவன் பலி!

கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ஜீப் வண்டி, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 முன்னால் சென்ற முச்சக்கரவண்டி மீது ஜீப் மோதியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் சிறு குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர். ஜீப் வண்டியும் முன்னால் ஓடி வீதிக்கு அருகில் இருந்த வர்த்தக வண்டியுடனும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, ஆண் குழந்தை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர். 

 உயிரிழந்த குழந்தை மூன்றரை வயதுடையவர் என்பதுடன் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்தவர். விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4