இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

#SriLanka
Thamilini
1 year ago
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் (திருத்தப்பட்ட) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

 தகுதியுடையவர்கள் உரிய விண்ணப்பங்களை பாராளுமன்ற இணையத்தளத்தில் (www.parliament.lk) "இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம்" என்ற விரைவு இணைப்புகளின் கீழ் வெளியிடப்பட்ட வடிவத்தில் தயார் செய்ய வேண்டும். 

 முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்பு சபை அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 28 அக்டோபர் 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும். 

மேலும் உறை/மின்னஞ்சலின் மேல் இடது மூலையில் "இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனம்" என்று குறிப்பிடப்பட வேண்டும். 

 இதற்கான வர்த்தமானி விளம்பரம் நேற்றும்(13)  இன்றும் (14) தேசிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4