நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

#SriLanka #Rain
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. கனமழை பெய்யக்கூடும். 

 நாட்டின்  ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

 இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4