கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான புகையிரத சேவைகள் பாதிப்பு!

#SriLanka #Train #service
Thamilini
1 year ago
கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான புகையிரத சேவைகள் பாதிப்பு!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. 

 இன்று (15) காலை 7 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த மீனகாயா  புகையிரதத்தின் இயந்திரம் தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது. 

 இதன்படி, பிரதான பாதை மற்றும் கரையோரப் பாதைகளில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4