தீப்பிடித்து பற்றி எரிந்த ரயில் : பயணிகள் வெளியேற்றம்!

#SriLanka #Accident #Train
Thamilini
1 year ago
தீப்பிடித்து பற்றி எரிந்த ரயில் : பயணிகள் வெளியேற்றம்!

களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதம் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ளது.

 இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த புகையிரதம் களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 புகையிரதத்தின் பின் இயந்திரத்தில் தீ பரவியதையடுத்து களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 எவ்வாறாயினும், குறித்த ரயிலில் இருந்த பயணிகள் மற்றுமொரு புகையிரதத்தின் மூலம் மருதானைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரையோரப் பாதையில் புகையிரதத்தில் சிறிது தாமதம் ஏற்படும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4