டயானா கமகேவின் வழக்கு : சாட்சிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Court Order #sri lanka tamil news
Thamilini
1 year ago
டயானா கமகேவின் வழக்கு : சாட்சிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகள் தொடர்பான சாட்சிகளை எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 தவறான தகவல்களைச் சமர்ப்பித்து இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

 விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்மொழியப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 இதன்படி, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அல்லது அவரது பிரதிநிதி மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பல தரப்பினருக்கு இந்த அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் வரும் 24ம் திகதி விசாரணைக்கு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4