ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு குறைவடையும் சட்டவிரோத இறக்குமதி பொருட்கள்!

#SriLanka #Airport #Import
Mayoorikka
1 month ago
ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு  குறைவடையும் சட்டவிரோத இறக்குமதி பொருட்கள்!

இலங்கையில் உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக வந்து இறங்குகின்ற சில பொருட்கள் சட்டவிரோதனமான முறையில் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 துறைமுகத்தில் பல கோடிக்கணக்கான பொருட்கள் வெளிநாட்டிலிருந்து அதிகமாக துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வந்த பொருட்கள் வரி அற விடாமல் சட்டத்துக்கு விரோதமாக மறைத்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் பிடிபட்டு விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் இருப்பதாக துறைமுக செய்திகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

 அந்த வகையிலே துபாயில் இருந்து வந்த பல கோடி பெறுமதியான நகைகள் தங்கங்கள் இருப்பதாகவும் மற்றும் புகைத்தல் தொடர்பான பொருட்களும் மதுபான வகைகள் போன்ற பொருட்களும் அத்தியாவசியமாக அதிக விலையில் இலங்கையில் இருக்கக்கூடிய பொருட்களை கப்பலிலும் விமானத்திலும் கூலிக்கு கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 அதேவேளையிலே அதனுடைய முதலாளி அதாவது அதை கடத்த வைத்தவர்களை பொலிஸ் தேடி வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது என்று உள் வட்டார தகவல்கள் தெரிகின்றன. இந்தநிலையில் இந்த தகவல்களை இதுவரை காலமும் கண்காணித்த NPP கட்சியின் ஆதரவாளர்கள் பலர் துறைமுகத்திலும் மற்றும் விமான நிலையத்திலும் வேலை செய்பவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 அதனடைப்படையில் இப்படியான பொருட்கள் அகப்பட்டு இருக்கிறது. இந்த பொருட்களை கையகப்படுத்தி இருக்கிறார்கள் இவற்றை இவ்வளவு காலமும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளியே கடத்திக் கொண்டு வந்து விற்பனை செய்திருக்கிறார்கள். பெரிய பெரிய தொழில் அதிபர்கள் என்று கூறப்படுகின்ற கடத்தல்காரர்கள் செய்திருக்கிறார்கள். வெளியே இருக்கின்ற கடைகள் அல்லது மொத்தமாக வியாபாரம் செய்கின்ற வியாபார நிலையங்களுக்கு அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 கடந்தகாலங்களில் இவ்வாறான பொருட்கள் வரி கட்டாமல் வெளியே கொண்டு வருவதற்கு லஞ்சம் கொடுத்து கொண்டு வரப்பட்டது. 

ஆனால் தற்பொழுது அரசு மாறியதன் பிற்பாடு யாருமே லஞ்சம் வாங்குபவர்கள் கூட லஞ்சம் வாங்க மறுப்பதாகவும் இந்த பொருட்கள் பிடிபட்டுள்ளதாகவும் இப்பொழுது இந்த பொருட்களை கடத்துவது நூற்றுக்கு 75 வீதம் குறைந்திருப்பதாகவும் உள்ளக செய்தி மூலம் கிடைத்துள்ளது.

 அந்த வகையிலே இந்த நாட்டினுடைய ஆட்சி மாற்றத்திற்கு பிற்பாடு இப்படியான நல்ல செயல்கள் அரசாங்கத்திற்கு வருமானத்திற்கு வரக்கூடிய செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் அரசாங்கமும் வருமானத்தை அதிகரிப்பதற்காக நேர்மையாக லஞ்சம் கொடுக்காமல் அவர்கள் வரி செலுத்தி இப்படியான பொருட்களை இறக்குமதி செய்தால் அந்த வரியின் ஊடாக இலங்கையினுடைய கடனை கூட கொடுத்து விடலாம் என்ற ஒரு தூர நோக்கோடு இவர்கள் இயங்கிக் கொண்டு வருவதை லங்கா 4 ஊடகமும் பாராட்டுகிறது.

 இனிமேல் இப்படி தொடர்ந்தாள் நிச்சயமாக இலங்கை ஒரு குறிப்பிட்ட வருடத்தில் கடன் இல்லாத இலங்கையாக நாங்கள் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ முடியும்.

 இது போன்ற மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள லங்கா 4 இணையத்தளத்தினையும், லங்கா 4 யூருப் சனலையும் பார்வையிடுங்கள். -லங்கா 4 இன் பிரத்தியேக செய்தி -

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!