பொதுத் தேர்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Election
Mayoorikka
1 hour ago
பொதுத் தேர்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக மாவட்ட ரீதியாக செலவிடக் கூடிய தொகையை நிர்ணயித்த அதிவிசேட வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

 2023 இலக்கம் 03 எனும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான செலவு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

 இதன்படி, மாவட்ட ரீதியாக வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய அதிக பட்ச தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 56 இலட்சத்து 43 ஆயிரத்து 387 ரூபாயையும், களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 47 இலட்சத்து 40 ஆயிரத்து 787 ரூபாவையும் செலவிட முடியும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!