சிறீதரனை வெளியேற்றினால் தமிழரசுக் கட்சி சிங்கள அரசுக் கட்சியாக மாறும்! (பிரத்தியேக செய்தி)
தெரிந்தோ தெரியாமலோ 2010 இல் மாவையூடாக சுரேஷ் பிரேமசந்திரனின் அனுசரனையோடு கிளிநொச்சியில் தோற்று வென்றவர் சிறீதரன்.
பின்னர் தன்னை ஏற்றி விட்ட சில ஏணிகளை உதறிவிட்டு புலிகளில் இருந்த தனக்கு இசைவானவர்களை இணைத்து புலி ஆதரவோடு அதை வைத்தும் மாவீரர்களை வைத்தும் தான் ஒரு பிரபாகரனின் மறு அவதாரமாகவும் அவர் கொள்கையே தனது கொள்கையாகவும் கூறி மெல்ல மெல்ல தமிழரசை தனது கைக்குள் கொண்டுவர பாடுபவர் சிறீதரன்.
அதற்காக அவர் கொடுக்கும் விலை அமைதி மௌனம் அதற்கு அவருக்கு ஆன்மீக வழியில் கண்ணன் வழிபாடும் ஆகும். கண்ணனின் மந்திரத்தை சிறீதரன் ஓதாத நாள் இருக்காது. கண்ணன் எவ்வளவு சூட்சியாளனோ அப்படித்தான் சிறீதரனும்.
அதேபோல கிளிநொச்சியில் சிறீதரன் நல்லவரா என யாரைக் கேட்டாலும் அதிகமானோர் தன்பலவாதி. தமிழ்த் தேசியத்தை வியாபாரம் செய்பவர் எனவும் பலவாறாகக் கூறுவார்கள். ஆனால் தேர்தல் என வந்தால் சிறீதரனுக்குத்தான் வாக்களிப்பார்கள்.
ஏன் என பார்த்தால் சிறீதரனுக்கு எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை கிடைக்கவேண்டுமென ஆசை உண்டு. பெயரையும் புகழையும் விரும்பும் அவர் அதைப் பெற எதிரியின் நல்லது கெட்டதிலும் சென்று கலந்து கொள்வது வழமை. அதனால் நக்கினான் நாவிழந்தான் என்பது போல மக்கள் நன்றிக்காக சிறீதரனுக்கு வாக்களிப்பது உண்டு.
அதை வைத்தும் சிறீதரன் தனது பேச்சு திறனாலும் இப்பொழுதும் வென்றுகொண்டிருக்கிறார். இது தமிழரசு கட்சிக்கும் இப்பொழுது அவரது ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர். அதைவிட சுமந்திரன், சாணக்கியன் போன்றோர் சிங்கள கலப்பு என்பதாலும் சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அப்பால் நிற்பதாலும் வடக்கில் உள்ள தமிழ் பற்றாளர்கள் சிறீதரனை சார்ந்துள்ளனர்.
இப்பொழுது சிறீதரன் மீது சுமத்தப்படும் குற்றங்கள் பலமானதாக இல்லாவிட்டாலும் சுமந்திரனின் வட மாகாண முதலமச்சர் ஆசைக்கு சிறீதரன் ஆதரவு செலுத்தமாட்டார் என்பதால் சிறீதரனை தமிழரசிலிருந்து வெளியேற்றியே தீரவேண்டும் என்பதால் தகுந்த நேரத்தில் காய் நகர்த்தும் சுமந்திரன், சாணக்கியன், Cvk சிவஞானம் போன்றோர் தோற்ப்பது நிஜம். சிறீதரனை வெளியேற்றினால் சிறீதரனுக்கு அனுதாப தமிழ்த் தேசிய ஆதரவுகள் அதிகரிப்பது நிச்சயம்.
அதுவே சுமந்திரனுக்கு வடக்கில் கால் வைக்க கூட எதிர்ப்புக்கள் மேலும் கூடும். அத்தோடு தமிழரசு கட்சியும் சாம்பலாகும். சிறீதரனை பொறுத்தவரை தலைவர் பதவியே முக்கியம் அதற்கு என்ன விலையும் கொடுப்பார், நடிப்பார்.
தமிழ் அரசியலை பொறுத்தவரை அவர்களால் மக்களுக்கு எவ்வித பிரியோசனமும் இல்லை. அவர்களுக்கு மக்களால் பெரும் நன்மைகள் உண்டு. எனவே அவர்கள் தம் இலாபத்துக்காக எப்படியும் நடிப்பார்கள். எனவே தமிழரசு கட்சியிலிருந்து சிறீதரன் வெளியேறவே மாட்டார். வெளியேற்றப்பட்டாலும் அது சிறீதரனுக்கு நன்மையே. தமிழரசுக்கட்சி சிங்கள அரசு கட்சியாக மாறுவது நிச்சயம்.
செய்தி
LANKA4 ஊடகம்.
இலங்கையன்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”