45 சதவீத மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்! ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்
#SriLanka
#Power
Mayoorikka
1 month ago
இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை என ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
திருத்தப்பட வேண்டிய மின்சாரக் கட்டணம் தொடர்பான தரவுகளை இதுவரை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பவில்லை எனவும் ஆனந்த பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மின்சார சபையின் நிகர லாபம் 155 பில்லியனைத் தாண்டியுள்ளது, ஏன் காத்திருக்கிறீர்கள். இதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 45 சதவீத மின்சார கட்டணத்தை குறைக்க முடியும். அந்தச் சாதகத்தை மக்களுக்கு வழங்கச் சொல்கிறோம் என்றார்.