முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் அவசியம்!

#SriLanka #prices #Egg
Mayoorikka
1 year ago
முட்டை விலையை நிர்ணயம் செய்ய  விலை சூத்திரம் அவசியம்!

முட்டை விலையை நிர்ணயம் செய்ய 'விலை சூத்திரம்' ஒன்றை கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

 ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்தார்.

 அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில், ''முட்டை விலை தொடர்பான நெருக்கடி இன்னும் தீரவில்லை. சந்தையில் முட்டை விலை 40 முதல் 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக ஒரு குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு முட்டையின் உண்மையான உற்பத்திச் செலவு 20 முதல் 23 ரூபாய் வரை மட்டுமே செல்லும். பண்ணையில் இருந்து 30 ரூபாய்க்கு முட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்''. என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4