வட மாகாணத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #sri lanka tamil news
Thamilini
1 year ago
வட மாகாணத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வட மாகாணத்தின் சில இடங்களில் இன்று (19.10) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

 மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4