வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு!

#SriLanka #weather
Mayoorikka
1 month ago
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு!

நாளை 20.10.2024 இரவு அல்லது 21.10.2024 பகல் வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்ததாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. 

இது எதிர்வரும் 22.10.2024 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து 25.10.2024 அன்று புயலாக மாறி இந்தியாவின் புவனேஸ்வர் க்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இந்த புயலால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை ( தற்போதைய நிலையில்) இதன் காரணமாக இன்று மாலை முதல் எதிர்வரும் 26.10.2024 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எதிர்வரும் 22.10.2024 முதல் 26.10.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. அதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதத்திலும் மூன்று தாழமுக்க நிகழ்வுகள் தோன்றும் வாய்ப்புள்ளன. 

அதேவேளை நவம்பர் மாதத்தின் 18 நாட்கள் மழை நாட்களாக அமையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் வரும் நவம்பரில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!