படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்!

#SriLanka #Jaffna #Journalist
Mayoorikka
1 year ago
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்!

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.

 மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

 இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 

images/content-image/2024/1729332477.jpg

 அமையத்தின் செயலாளர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலிசெலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4