இலங்கையின் பணவீக்கம் செப்டம்பரில் வீழ்ச்சி!

#SriLanka #inflation
Mayoorikka
1 year ago
இலங்கையின் பணவீக்கம் செப்டம்பரில் வீழ்ச்சி!

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

 தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 1.1 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 0.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

 அதேநேரம் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் உணவல்லா பணவீக்கம் 0.2 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. 

அது செப்டெம்பர் மாதத்தில் 0.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4