விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் மீட்பு!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் மீட்பு!

விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் தொகையொன்றை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

 பல வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விமான அஞ்சல் மூலம் கொண்டுவரப்பட்ட சந்தேகத்திற்கிடமான பல பொதிகள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விமான அஞ்சல் முகவர் நிறுவனம் உரிய அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவித்தலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 07 பொதிகளில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 அந்த பார்சல்களில் 07 கிலோ 21 கிராம் ஐஸ் போதைப்பொருள், 01 கிலோ 338 கிராம் மண்டி மற்றும் 01 கிலோ 143 கிராம் குஷ் போதைப்பொருள் காணப்பட்டது. 

 இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4