இரத்மலானை புகையிரத நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

#SriLanka #GunShoot #sri lanka tamil news
Thamilini
1 year ago
இரத்மலானை புகையிரத நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

இரத்மலானை புகையிரத தளத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 சொத்துக்களை திருடுவதற்காக புகையிரத மைதானத்திற்குள் பிரவேசித்த ஐவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்போது ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

 சந்தேகநபர்களின் தாக்குதலில் காயமடைந்த புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மலையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4