ஜோன்ஸ்டனை கைது செய்ய நடவடிக்கை!

#SriLanka #Arrest
Mayoorikka
3 hours ago
ஜோன்ஸ்டனை கைது செய்ய நடவடிக்கை!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு BMW கார் தொடர்பில் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று (22ஆம் திகதி) கொழும்பில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்துதல், குறித்த காருக்கு திருடப்பட்ட போலி இலக்கத் தகட்டைப் பயன்படுத்துதல் மற்றும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மறைத்து வைக்குமாறு கட்டளையிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இச்சம்பவம் தொடர்பில் இதுவரையான விசாரணையில் சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மைகளின்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்ற சந்தேக நபர் இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதவான் தனுஜா லக்மாலியிடம் அறிக்கை சமர்ப்பித்து தெரிவித்தனர்.

 முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!