முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

#SriLanka #Arrest
Mayoorikka
1 year ago
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கொழும்பில் உள்ள நட்சத்திர தர ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த தமக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பதிவு செய்யப்படாத சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (23) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்திருந்தார்.

 இந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு நேற்று (22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 விசாரணையின் போது, ​​பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கத் தயார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் அறிவித்திருந்தனர். அத்துடன், மனு மீதான பரிசீலனை அக்டோபர் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4