ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வைத்திருந்த BMW கார் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka
Thamilini
1 year ago
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வைத்திருந்த BMW கார் தொடர்பில் வெளியான தகவல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வைத்திருந்ததாக கூறப்படும் பதிவு செய்யப்படாத BMW கார் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளது. 

 சர்வதேச பொலிஸ் தரவு அமைப்பு மூலம் குறித்த BMW காரின் சேஸ் எண்ணை சோதித்த போது, ​​இது 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு.ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அங்கு, குறித்த BMW கார் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுக் கொள்ளை விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4