பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka
Dhushanthini K
1 month ago
பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நான்கு பேரில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன தெரிவித்தார். 

 கடந்த 29ஆம் திகதி உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் வைத்தியர் காமினி பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  "வாழ்நாளில் 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. நீங்கள் அதை பற்றி அறிந்திருந்தால் நோயால் பாதிக்கப்படமாட்டீர்கள்” எனக் கூறியுள்ளார். 

இதேவேளை பக்கவாதம் ஏற்படுவதை பாதிக்கும் முக்கிய காரணிகள் குறித்து நரம்பியல் நிபுணர் டாக்டர் சுரங்கி சோமரத்ன செய்தியாளர் சந்திப்பில் பின்வருமாறு விளக்கினார். "முக்கியமாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல், அதிக மது அருந்துதல், அதிக கொழுப்பு அளவு, மன அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதய நோய்களில் துடிப்பு மாற்றங்கள் ஆகியவை பக்கவாதம் ஏற்பட முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!