நூதனமான முறையில் குழந்தைகளின் கழுத்தில் இருந்த பஞ்சாயுதங்களை திருடிய தம்பதியனர்!
முன்பள்ளி மாணவர்களின் பஞ்சாயுதங்களை அதிநவீன முறையில் திருடிய தம்பதியரை மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருமணமான தம்பதியொருவர் தமது சிறிய மகளைப் பயன்படுத்தி மிகவும் நூதனமாக இந்த திருட்டை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்கள் குட்டி மகளின் பிறந்தநாளுக்கு விளையாட்டு உடை, காலணிகள் தருவதாகக் கூறி குழந்தைகளின் உயரத்தை அளக்கும் போர்வையில் குழந்தைகளின் தோளில் கட்டியிருந்த பஞ்சாயுதங்களை அவர்கள் திருடியுள்ளனர்.
மஹியங்கனை மற்றும் ரிதிமாலியயெத்த உள்ளுராட்சிச் செயலகப் பிரிவுகளில் முன்பள்ளிகளில் அதிக வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பல சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் திருடப்பட்ட பஞ்சாயுதத்துடன் தியத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரும் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மஹியங்கனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.
இதுதவிர, நோய்வாய்ப்பட்டவர்களிடம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி பணம் வசூலிக்கும் மோசடியிலும் தம்பதியினர் ஈடுபட்டு வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்பதியும் அவர்களது மகளும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.