பிரித்தானியாவில் வரி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
பிரித்தானியாவில் அதிகளவிலான சொத்துக்கள் மற்றும் பங்குகளை வைத்திருப்போருக்கு வரி உயர்வு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் Sir Keir Starmer, "உழைக்கும் மக்கள்" என்ற அவை பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி விஞ்ஞாபனம் "உழைக்கும் மக்கள் மீதான வரிகளை அதிகரிக்காது" என்று உறுதியளித்த பின்னர், "உழைக்கும்" நபர் பற்றிய அவரது வரையறையைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமரிடம் கேட்கப்பட்டது.
உழைக்கும் நபர் யார் என்பதற்கான வரையறையை என்னிடம் கேட்கிறீர்கள், பிறகு நீங்கள் அந்த வரி என்னவாக இருக்கும் என்பது பற்றிய அனுமானங்களை உருவாக்குகிறீர்கள் என ஸ்டாமர் பதிலளித்துள்ளார்.
எவ்வாறாயினும் பட்ஜெட்டில் முதலாளிகள் மீதான தேசியக் காப்பீட்டை உயர்த்துவதை அமைச்சர்கள் நிராகரிக்க மறுத்ததைத் தொடர்ந்து வரையறை மீதான விவாதம் தீவிரமடைந்துள்ளது.