இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!

#SriLanka #AnuraKumara
Dhushanthini K
4 weeks ago
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திரு கார்மென் மொரேனோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தது. 

 இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரிடம் தெரிவித்த ஜனாதிபதி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார். 

 குறிப்பாக முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கூடிய விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

 ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கியமான பங்காளியாகும், இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி மற்றும் சுற்றுலா சந்தையாகவும் மூன்றாவது பெரிய இறக்குமதி சந்தையாகவும் செயல்படுகிறது. 

 இதேவேளை, ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார். 

 மத்திய கிழக்கின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரான் தூதுவருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!