வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு!

#SriLanka
Mayoorikka
1 year ago
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு!

தென்கொரியாவில் E-8 வீசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகள் வழங்கப்படவுள்ளதாக கூறி இடம்பெறும் பணமோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 தென்கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு தென்கொரியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் இதுவரையில் அவ்வாறான உடன்பாடு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும், அதன் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

 குறுகிய கால வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவசியமானால், இலங்கையின் மாகாண சபைகள், தென்கொரியா அரசுகளுடன் உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

 E-8 விசா பிரிவின் கீழ், தென்கொரியாவில் வேலைகளை பெறுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பணம் வழங்குவதை தவிர்க்குமாறும், பணத்தை மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், சிறப்பு விசாரணைக்கு தெரிவிக்குமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வேலை தேடுபவர்களுக்கு அறிவுறுத்துகிறது. 

 இதற்காக, பணியகத்தின் பிரிவு அல்லது ஹாட்லைன் எண் 1989 இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4