அரிசி இருப்பு தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ள நடவடிக்கை!
அரிசி இருப்புக்கள் தொடர்பில் விசேட சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான சனத்தொகை கணக்கெடுப்பு இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (26.10) மற்றும் நாளை (27.10) 4 மாவட்டங்களை மையப்படுத்தி அரிசி இருப்பு கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக, சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரிசியின் விலை அதிகமாக இருப்பதாகவும் நுகர்வோர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை வர்த்தகர்களை வரவழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.