மத்திய கிழக்கில் அதிகரிக்கும் மோதல் : இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!

#SriLanka
Dhushanthini K
4 weeks ago
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் மோதல் : இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வர விரும்பும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், யுத்த மோதல்கள் காரணமாக இதுவரையில் எந்தவொரு இலங்கையர்களும் இலங்கைக்கு வருமாறு கோரவில்லை என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!