இன்றைய வானிலை : பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#weather #Rain
Thamilini
1 year ago
இன்றைய வானிலை : பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ மழை பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.

 50மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

 வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றருக்கு மேல் காற்று வீசக்கூடும். 

 இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4