லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வீட்டில் துன்புறுத்தலுக்கு உள்ளான நபர்!
பிரித்தானியாவின் லண்டனின் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் துன்புறுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைப்பினை மேற்கொண்டு காப்பாற்றியுள்ளனர்.
லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்களில் மிகவும் தனித்துவமான ஒன்றாக திகழ்கிறது.
இந்நிலையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம லண்டனில் வசித்த வீட்டில் பணியாற்றிய இளைஞன் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையை சேர்ந்த பிரதான சமையல்காரான சஞ்சய் தினேஷ் சிறிவர்தன, பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வீட்டுக்காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், போகொல்லாகம குடும்பத்தினரின் மரண அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்கள் காரணமாக, உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்து வந்த சிறிவர்தன, வீட்டை விட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். கடுமையான துஷ்பிரயோகம் காரணமாக குறித்த இளைஞன் தற்கொலை செய்துக் கொள்வதற்கும் முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள தனது பெண் நண்பரிடம், தான் இவ்வாறு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தனக்கு உதவுமாறும் கோரியுள்ளார். இது குறித்து உடனடியாக பிரித்தானியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அதிரடியாக தூதரக இல்லத்தை முற்றுகையிட்ட பொலிஸார் ஆபத்திலிருந்த நபரை காப்பாற்றியுள்ளனர். கோசல மதுரங்க பொலிஸாரினால் காப்பாற்றப்பட்ட போதிலும், தற்போதுள்ள இராஜதந்திர விலக்கு காரணமாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், தெரியவந்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திரப் பிரச்சினை ஏற்படுவதனை தவிர்க் கோசல மதுரங்காவின் அடிப்படை உரிமைகளை உடனடியாகப் பாதுகாத்து மூன்று நாட்களுக்குள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.