25இற்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையை உருவாக்க அநுர குமார அழைப்பு!
நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் இயக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நமக்கு நிறைய வேலை இருக்கு. முதலில் இந்த நாட்டை கட்டியெழுப்ப நம் நாட்டில் உள்ள அரசியலை மாற்ற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் மோசமாக நடந்துகொள்கிறார்கள். மிளகாய் தூள் கொண்டுவந்து அடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். மக்களைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் கை ஓங்கிய போது, அது குற்றவாளிகளும், கப்பம் கட்டுபவர்களும் நிறைந்த இடமாக மாறியது நினைவிருக்கலாம்.
ஆனால் இந்த முறை நவம்பர் 14 பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான பெரும் முயற்சியாகும். 25க்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையை உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நாட்டை மாற்ற அரசியல் தலைமையின் முக்கிய இடம் பாராளுமன்றம். அந்த பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் தேவை. அதன் பிறகு 25க்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையை அமைப்போம். அறிவியல் ரீதியில் அமைச்சுக்களை பிரிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.