முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பது மக்களின் கடமையல்ல - சலுகைகளை இல்லாமல் செய்வோம்!
கடந்த அரச தலைவர்களின் சலுகைகள் மற்றும் நன்மைகள் எதுவாக இருந்தாலும் முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீண்டும் உறுதியளித்தார்.
காலி, பத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பது மக்களின் கடமையல்ல என்றும் கூறியுள்ளார்.
சுற்றறிக்கைகள், பாராளுமன்ற சட்டம் மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நன்மைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
"சுற்றறிக்கைகள் மற்றும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று கூறிய அவர், இப்படி ஒரு நாட்டை நாங்கள் நடத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
163 செக்யூரிட்டிகள், ஆம்புலன்ஸ், ஜீப், கார் போன்றவற்றைக் கேட்கிறார்கள். 17 அல்லது 18 BMW வாகனங்களைத் தேடுகிறார்கள். அனைத்து வசதிகளையும் இல்லாமல் செய்வோம். அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.